கோலார் நகரில் அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லை: பொதுமக்கள் அவதி

கோலார்: கோலார் நகரில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.  கோலார் நகரில் உள்ள 35 வார்டுகளிலும் தெருநாய்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. சாமானியமாக நகரில் உள்ள இறைச்சி கடைகள், ஓட்டல்கள், மார்க்கெட்டுகள், கல்யாண மண்டபங்கள், மீன்கடைகள், சாலையோர தள்ளுவண்டி உணவங்களில் புற்றீசல் போல் உருவாகியுள்ளது. இந்த இடங்களில் எல்லாம் கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் அதிகமாக காணப்படுகிறது. இரவு 9 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும்போது, சாலைகளில் நடந்து செல்லும் மக்கள், பைக்கில் செல்பவர்களை விரட்டி சென்று வேட்டையாடுகிறது. பைக்கில் செல்வோரை நாய்கள் விரட்டி அடிக்கும்போது, அதற்கு பயந்து வேகமாக ஓட்டும் போது தவறி விழுந்து காயம் ஏற்படுவதும் தினமும் நடந்து வருகிறது. பள்ளி செல்லும் சிறுவர்களும் நாய்களின் கோரப்பசிக்கு ஆளாகி வருகிறார்கள்.

நகர பகுதி மக்களை மிரட்டி வரும் தெருநாய்களை கட்டுப்படுத்தும் விஷயத்தில் நகரசபை என்ன செய்கிறது. நகரசபையில் இயங்கி வரும் தெருநாய்கள் தடுப்பு பிரிவு என்ன செய்து ெகாண்டு இருக்கிறது என்ற கேள்வியை மக்கள் எழுப்புகிறார்கள். பொதுமக்களை மட்டுமில்லாமல், இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுவரும் போலீசாரையும் நாய்கள் விட்டு வைக்கவில்லை. கோலார் நகரசபை எடுத்துள்ள கணக்கெடுப்பு படி நகரில் 30 ஆயிரம் தெருநாய்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. கர்நாடக நகரசபை சட்டம் 222ன் படி நகரசபைகளில் தெருநாய்கள் கட்டுப்படுத்தும் தனிப்பிரிவு அமைக்க வேண்டும். அந்த அமைப்பு தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும். இன பெருக்கும் தடுக்கும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பது உள்பட பல அம்சங்கள் சட்டத்தில் உள்ளது. தற்போது ஒரு நாய்க்கு ஏபிசி செய்ய ₹1,200 செலவாகும் என்பதால், அதற்கான முயற்சி மேற்கொள்ளவில்லை என்று கருத்து நிலவுகிறது.

Related Stories: