பத்மஸ்ரீ விருது பெற்ற பாலிவுட் ‘வில்லி’ நடிகை மரணம்

மும்பை: பத்மஸ்ரீ விருது பெற்ற பாலிவுட்டின் வில்லி நடிகையும், மூத்த நடிகையுமான சசிகலா மும்பையில் காலமானார். மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரைச் சேர்ந்த பாலிவுட் மூத்த நடிகை சசிகலா (88) கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென காலமானார். இவரது மரணத்திற்கு பாலிவுட் நடிகர், நடிகையர் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சசிகலா, கதாநாயகியாகவும், வில்லியாகவும் நடித்து பிரபலமானவர். ஓம்பிரகாஷ் சாய்கல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

முன்னதாக சசிகலாவின் தந்தை, தனது தொழிலில் பெரும் நஷ்டத்தை சந்தித்ததால், குடும்பத்துடன் வேலை தேடி மும்பைக்கு வந்தனர். அப்போது பிரபல பாடகி நூர்ஜஹானை சசிகலா சந்தித்தார். நூர்ஜகானின் கணவர் இயக்கிய ‘ஜீனத்’ என்ற படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதன்பின்னர் ‘டின் பட்டி சார் ரஸ்தா’, ஆர்த்தி, குஹ்ரா, பூல் ஔர் பட்டர் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். ஆர்த்தி, கும்ரா ஆகிய இரு படங்களும் ‘பிலிம்பேர்’ விருது பெற்றன. 2007ம் ஆண்டு சசிகலா திரைப்படத்துறையில் ஆற்றிய பங்களிப்புக்காக மத்திய அரசின் பத்ம விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: