லடாக்கில் எஞ்சியுள்ள இடங்களில் படைகள் வாபசுக்கு சீனா ஒத்துழைக்கும்: இந்தியா நம்பிக்கை

புதுடெல்லி:  ‘கிழக்கு லடாக்கில் எஞ்சியுள்ள பகுதிகளில் இருந்தும் படைகளை வாபஸ் பெறுவதற்கு இந்தியாவுடன் இணைந்து சீனா செயல்படும்,’ என வௌியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:இந்தியா- சீனா இடையே ராணுவம், தூதரக ரீதியிலான உறவுகள் தொடர்ந்து வருகிறது. எனவே, கிழக்கு லடாக்கில் எஞ்சியுள்ள இடங்களில் இருந்தும் இருநாட்டு படைகளை விரைவாக வாபஸ் பெறுவதில் இந்தியாவுடன் இணைந்து சீனா செயல்படும் என நம்புகிறோம்.

இதன் மூலம், எல்லையில் அமைதி நிலவும். இரு நாட்டு உறவு மேம்படுவதற்கு வழிவகுக்கும். எல்லைப் பகுதியில் இதர பிரச்னைகளை விரைவாக முடிக்க வேண்டும் என்ற ஒருமித்த கருத்து நிலவுகிறது. மேலும், பாங்காங் ஏரி பகுதியில் படைகளை வாபஸ் பெறுவது என்பது இருநாட்டு ராணுவத்துக்கும் இடையேயான குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகும். இதன் மூலம், மேற்கில் உண்மையான கட்டுப்பாடு கோடு பகுதியில் பிற சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: