வெஸ்ட் இண்டீசுடன் 2வது டெஸ்ட் இலங்கைக்கு 377 ரன் இலக்கு

நார்த் சவுண்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணிக்கு 377 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.ஆன்டிகுவா, ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் மார்ச் 29ம் தேதி தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 354 ரன் குவித்து ஆல் அவுட்டானது. தொடக்க வீரரும் கேப்டனுமான கிரெய்க் பிராத்வெய்ட் 126 ரன், மேயர்ஸ் 49, ஹோல்டர் 30, ஜோசப் 29, கார்ன்வால் 73 ரன் விளாசினர். இலங்கை அணி முதல் இன்னிங்சில் 258 ரன்னுக்கு சுருண்டது. திரிமன்னே 55, சண்டிமால் 44, தனஞ்ஜெயா 39, நிஸங்கா 51, டிக்வெல்லா 20 ரன் எடுத்தனர்.

96 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ், 4 விக்கெட் இழப்புக்கு 280 ரன் என்ற ஸ்கோருடன் டிக்ளேர் செய்தது (72.4 ஓவர்). பிராத்வெய்ட் 85, மேயர்ஸ் 55 ரன் விளாசினர். ஹோல்டர் 71, ஜோஷுவா 20 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, 377 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி, 4ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 29 ரன் எடுத்திருந்தது. திரிமன்னே 17, கருணரத்னே 11 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

Related Stories: