உபரி நீர் கால்வாய் சீரமைப்பு: எஸ்.சுதர்சனம் உறுதி

புழல்: மாதாவரம் தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.சுதர்சனம், புழல் ஒன்றியம் வடகரை, அழிஞ்சிவாக்கம், கிரான்ட் லைன், விளாங்காடுபாக்கம், சென்றபாக்கம் ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் திறந்த ஜீப்பில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு வழிநெடுகிலும் ஏராளமான பெண்கள் மலர்தூவி, ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது வேட்பாளர் எஸ்.சுதர்சனம் பேசுகையில், ‘‘இப்பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் மின்விளக்கு, சாலை, குடிநீர் வசதி மற்றும் அரசு பள்ளி கட்டிடங்கள், சத்துணவு கூடங்கள், ரேஷன் கடை என பல பணிகளை செய்துள்ளேன். தொகுதி பிரச்னைகளை சட்டசபையில் பேசி தீர்வு கண்டுள்ளேன்.

இம்முறையும் தேர்ந்தெடுத்தால் நிறைவு பெறாத பணிகளையும் செய்து முடிப்பேன். விவசாயிகள் மின் மோட்டார் வாங்க ₹10 ஆயிரம் மானியம் வழங்கப்படும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும். புழல் ஏரி உபரி நீர் கால்வாய் சரி செய்யப்படும்,” என்றார். பிரசாரத்தில், திருவள்ளூர் எம்பி ஜெயக்குமார், புழல் ஒன்றிய திமுக செயலாளர் நா.ஜெகதீசன், ஒன்றிய குழு தலைவர் தங்கமணி திருமால், ஒன்றிய அவைத்தலைவர் வி.திருமால், ஊராட்சி தலைவர்கள் பாரதிசரவணன், ராமு, ஆஷாகல்விநாதன், வழக்கறிஞர் ஜானகிராமன், விளாங்காடுபாக்கம் செயலாளர் வழக்கறிஞர் சரவணன், பாரதி, காமராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் இனியவன்,

முன்னாள் ஒன்றிய செயலாளர் கணேஷ்கோதண்டன், இளைஞரணி ஒன்றிய துணை அமைப்பாளர் யுவராஜ், மல்லிராஜா, தங்கராஜ், திருவள்ளூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் திருவேற்காடு ரமேஷ், மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் அருணாச்சலம், புழல் வட்டார தலைவர் நித்தியானந்தம், மாதவரம் தெற்கு பகுதி தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories: