வேளாண் சட்டங்கள் பற்றி ஆய்வு: நிபுணர்கள் குழுவின் அறிக்கை; உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள சர்ச்சைக்குரிய 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லையில் 25 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சட்டங்களை எதிர்த்து பல்வேறு தரப்பினர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த சட்டங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக 4 பேர் குழுவை அமைத்து கடந்த ஜனவரியில் உத்தரவிட்டது. இக்குழுவில் பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் பூபேந்தர் சிங் மான், விவசாய பொருளாதார நிபுணர் அசோக் குலாட்டி, தெற்காசியாவின் சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் பிரமோத் ஜோஷி,

ஷேட்கெரி, சங்கதனா அமைப்பின் தலைவர் அனில் கன்வட் ஆகியோர் இடம் பெற்றனர். இதில், புபேந்தர் சிங் மட்டும் விசாரணைக் குழுவில் இருந்து விலகி விட்டார். இதனால், மற்ற  3 பேர் மட்டும் வேளாண் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்து வந்தனர். இந்நிலையில், இந்த குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. அடுத்த விசாரணையின் போது இந்த அறிக்கை குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை மேற்கொள்ளும் என தெரிகிறது.

Related Stories: