மியாமி ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஆஷ்லி, ஸ்விடோலினா

மியாமி: மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அரையிறுதியில் விளையாட நடப்பு சாம்பியன் ஆஷ்லி பார்தி, எலினா ஸ்விடோலினா ஆகியோர் தகுதிப் பெற்றுள்ளனர். மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ேபாட்டி ஒன்றில் உலகின்  முதல் நிலை வீராங்கனை ஆஷ்லி பார்தி(ஆஸ்திரேலியா), உலகின் 7ம் நிலை வீராங்கனைள அர்யனா சபலங்கா(பெலாரஸ்) ஆகியோர் மோதினர். அதில் முதல் செட்டை 6-4என்ற புள்ளி கணக்கில் ஆஷ்லி எளிதில் கைப்பற்றினார். ஆனால் டைபிரேக்கர் வரை நீண்ட 2வது செடை சபலங்கா 7-6என்ற புள்ளி கணக்கில் போராடி வசப்படுத்தினார். அதனால் சுதாரித்துக் கொண்ட ஆஷ்லி 3வது செட்டை 6-3 என்ற கணக்கில் மீண்டும் கைப்பற்றினார்.

அதனால் 2-1 என்ற செட்கணக்கில் வென்ற ஆஷ்லி அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தப்போட்டி 2மணி 16நிமிடங்கள் நீடித்தது. அதேபோல் மற்றொரு காலிறுதியில் உலகின் 57வது நிலை வீராங்கனை அனஸ்டரிஜா செவாஸ்டோவா(லாத்வியா), 5ம் நிலை வீராங்கனை எலினா ஸ்விடோலினா(உக்ரைன்) ஆகியோர் விளையாடினர். சுமார் ஒரு மணி 9 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் எலினா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இந்திய நேரப்படி இன்று  நடைபெற உள்ள முதல் அரையிறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஷ்லி பார்தி - எலினா ஸ்விடோலினா ஆகியோர் மோத உள்ளனர்.

Related Stories: