நேப்பியர்: வங்கதேசத்திற்கு எதிரான 2வது டி20 ஆட்டத்தில் 28ரன் வித்தியாசத்தில் வென்ற நியூசி தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம் டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தை 66ரன் வித்தியாசத்தில் வென்றது. எனவே தொடரில் நியூசி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் 2வது டி20 போட்டி நேற்று நேப்பியரில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய நியூசி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த வண்ணம் இருந்தது. இடையிடையே மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. ஓவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. அப்போது நியூசி 17.5 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 173ரன் எடுத்திருந்தது. பொறுப்புடன் விளையாடிய கிளென் பிலிப்ஸ் 58*(31பந்து, 5பவுண்டரி, 2சிக்சர்), டாரியல் மிட்சல் 34*(16பந்து, 6 பவுண்டரி)ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேசம் தரப்பில் மெகதி ஹசன் 2 விக்கெட் எடுத்தார்.