சென்னை : தமிழகம் வரும் மோடிக்கு டிவிட்டரில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வழக்கம் போல #GoBackModi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன இதனால் அரசியல் கட்சிகள் தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டு வருகின்றது.அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய டெல்லியில் இருந்து தேசிய தலைவர்கள் தமிழகத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.அந்த வகையில் தாராபுரத்தில் போட்டியிடும் தமிழக பாஜக தலைவர் முருகனை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரச்சாரம் செய்கிறார்.