அள்ளூர் கிராமத்தில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தல்

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அருகே கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அள்ளூர் கிராமத்தில் சுமார் 750க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், புதிய பாலத்தையொட்டி செல்லும் சாலையில், வடகிழக்கு பருவ மழையின்போது ஜல்லிகளும், செம்மண்ணும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் தற்போது போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக உள்ளது.

சேத்தியாத்தோப்பு பேருந்து நிறுத்தத்தில் இருந்து இறங்கி வரும் அள்ளூர் கிராமவாசிகள், புதிய பாலத்தை கடந்து வருபவர்கள், இந்த சாலையின் வழியாகத்தான் குடியிருப்பு பகுதிக்கு செல்கின்றனர். வெள்ளாற்றின் கரைமேல் அமைந்துள்ள சாலை என்பதால் இந்த சாலையின் வழியாகத்தான் சுடுகாட்டுக்கு செல்ல வேண்டும். எனவே, சேதமடைந்துள்ள இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அள்ளூர் கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories: