ராஜபாளையம் பகுதியில் மா விளைச்சல் அதிகரிப்பு

ராஜபாளையம் : ராஜபாளையம் பகுதியில் மா விளைச்சல் அதிகரித்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்பகுதியில் ஏற்றுமதி விற்பனைக் கூடங்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மாந்தோப்புகள் அதிகமாக உள்ளன. இப்பகுதியில் கடந்தாண்டு பெய்த மழையால், சப்பட்டை, பஞ்சவர்ணம் ஆகிய மா வகைகள் நன்றாக விளைந்துள்ளன. மாந்தோப்புகளில் பூவும் பிஞ்சுமாக உள்ளன. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து மா விவசாயிகள் கூறுகையில், ‘மாந்தோப்புகளில் பூவும், பிஞ்சுமாக உள்ளன. வரும் மாதங்களில் காற்று, மழை இல்லாமல் இருந்தால் விளைச்சல் அதிகமாக இருக்கும். இப்பகுதியில் மாம்பழங்களை குளிர்பதப்படுத்தும் அறைகள், பழச்சாறு தயாரிக்கும் ஆலைகளை உருவாக்கித் தர வேண்டும் என அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம். ஆனால், நடவடிக்கை இல்லை. மேலும், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் விற்பனை கூடங்களை அமைக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: