யாரிடம் பணம் பெற்றுவிட்டு போட்டி என கேட்கிறார்கள்..! சங்கடமாக உள்ளது..! தேர்தலில் இருந்து விலகினார் மன்சூர் அலிகான்

சென்னை: தமிழகத்தில் தேர்தல் திருவிழா களைகட்டி வருகிறது. அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகளுக்கு போட்டியாக சுயேச்சை வேட்பாளர்களும் தங்களுக்கு உரிய வித்தியாசமான பாணியில் மக்களை ஈர்க்கும் விதமாக பிரச்சார மேற்கொண்டுவருகின்றனர். திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, மக்கள் நீதி மய்ய கூட்டணி என 3 அணிகள் பிரிந்துள்ளது. அத்துடன் அதிருப்தி எல்எல்ஏக்கள், நிர்வாகிகள் சிலர் சுயேட்சையாகவும் களம் காண இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் மன்சூர் அலிகான்.

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய இவர், தமிழ்த் தேசிய புலிகள் கட்சி என்ற தனிக்கட்சியை தொடங்கி தொண்டாமுத்தூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அத்துடன் வித்தியாசமான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு மக்களின் கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். “பிரசாரத்துக்கு எங்கு சென்றாலும் யாரிடம் பணம் பெற்றுவிட்டு போட்டி என கேட்கிறார்கள். சங்கடமாக உள்ளது.” இதுவே நான் தேர்தலில் போட்டியிடாததற்கு காரணம் என மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

Related Stories: