பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா உறுதி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. பாகிஸ்தானிலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இந்நாட்டில் நேற்று முன்தினம் தான் நாடு தழுவிய அளவிலான கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் இம்ரான் கான் தொடங்கி வைத்தார். அப்போது, அவரும் தடுப்பூசி  போட்டுக் கொண்டார். இந்நிலையில், அவருக்கு காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து, அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது.  இதனால், அவர் தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இது பற்றி இம்ரானின் மருத்துவ ஆலோசனை குழுவை சேர்ந்தர்கள் கூறுகையில், ‘தடுப்பூசி 2வது டோஸ் போட்ட பிறகு 2 வாரங்கள் கழித்தே, உடலில் கொரோனா எதிர்ப்பு சக்தி ஏற்படும். இம்ரானின் உடல்நிலை தொடர்ந்து  கண்காணிக்கப்படுகிறது,’ என்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து, இம்ரானின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அவருக்கு தற்போது 67 வயதாகிறது.

Related Stories: