மக்களுக்காக கடுமையாக உழைப்பேன்: கரிகாலன் முடிச்சூரில் பிரசாரம்

தாம்பரம்: தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கரிகாலன் முடிச்சூர் ஊராட்சி பகுதிகளில் வீடு வீடாக சென்று, பொதுமக்களை சந்தித்து குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது, 2015ம் ஆண்டு ஏற்பட்ட கடும் வெள்ள பாதிப்பில் பாதிக்கப்பட்டபோது தாம்பரம் நகர மன்ற தலைவராக இருந்த கரிகாலன் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட முடிச்சூர் பகுதிக்கும் சென்று மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ததை நினைவு கூர்ந்த மக்கள், தங்களை எங்களால் எப்படி மறக்க முடியும் என நெகிழ்ந்தனர்.

அவர்களிடத்தில் பேசிய கரிகாலன், ‘‘ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியான அண்ணன் டிடிவி அவர்கள் முதல்வராக பதவியேற்ற உடன் பொதுமக்களுக்கு அளித்துள்ள வாக்குறுதிகளை உடனடியாக தொகுதி மக்களுக்கு பெற்று  தருவேன். புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான ஆட்சி தொடர, குக்கர் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும். மக்களுக்காக கடுமையாக உழைப்பேன்’’ என கேட்டுக்கொண்டார்.

பின்னர், அங்கிருந்த கிறிஸ்தவ தேவாலயத்திற்கு சென்று வழிபட்டார். அப்போது, கழக செய்தி தொடர்பாளர் தாம்பரம் நாராயணன், கழக மேற்கு ஒன்றிய செயலாளர் நந்தகுமார், முடிச்சூர் ஊராட்சி செயலாளர் ஜான் கென்னடி, தேமுதிக ஒன்றிய செயலாளர் சி.என்.ஆர்.நாகராஜ், தொகுதி பொறுப்பாளர் ஆனந்தராஜ், ஊராட்சி செயலாளர் குமார் மற்றும்  கூட்டணிக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், மகளிர் அணியினர் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: