சினிமால அவர் சீனியர்... அரசியல்ல ஜூனியர்! கமலை போட்டு தாக்கும் மன்சூர் அலிகான்

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் நடிகர் மன்சூர் அலிகான் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டு கூறியதாவது: பண முதலைகளை கடந்து மக்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள். நான் இங்கே மக்களிடம் வேலை கேட்டு வந்துள்ளேன். கவர்ச்சி அரசியலை வைத்து மக்களை ஏமாற்றக்கூடாது. திரைத்துறையில் கமலஹாசன் எனக்கு சீனியர். அரசியலில் அவர் என்னை காப்பி அடிக்கிறார். இவ்வாறு அவர் கூறினார். நடிகர் மன்சூர் அலிகான் அசையும் சொத்தாக ரூ.6 லட்சத்து 77 ஆயிரமும், அசையா சொத்தாக ரூ.1 கோடியே 60 லட்சம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

* அதிமுகவுக்கு எதிராக ‘தாலாட்டு பிரசாரம்’

அதிமுக அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள 68 சாதிகளை உள்ளடக்கிய சீர்மரபினர், தேனி மாவட்டம் உட்பட தமிழகம் முழுவதும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிமுகவிற்கு ஓட்டு போடக்கூடாது என பாலில் சத்தியம் செய்வது, தீபத்தில் சத்தியம் செய்வது, காலில் விழுந்து வேண்டுவது என விதவிதமாக பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும், இதுதொடர்பாக தேனி மாவட்டத்தை சேர்ந்த சீர்மரபினர் அமைப்பை சேர்ந்தவர்கள் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் தொட்டிலில் ஒரு பொம்மையை கிடத்தி தாலாட்டு பாடுகின்றனர். அதில், ‘‘சீர்மரபினர் அமைப்பினருக்கு டிஎன்டி சான்று வழங்க சொல் சாமி... அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டாம் சாமீ...’’ என தாலாட்டு ஸ்டைலில் பாடல் பட்டையை கிளப்புகிறது. இந்த வீடியோ வைரலாவதால் அதிமுக வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: