10 ஆண்டு கால அதிமுக அரசின் பாராமுகத்தால் தேனியில் பாழான பழைய அரசு மருத்துவமனை

* திமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டதால் மூடல்

* சிறிய நோய்களுக்கு கூட 10 கி.மீ செல்லும் மக்கள்

* தாலுகா மருத்துவமனையாக மாற்ற கோரிக்கை

தேனி: தேனியில் அதிமுக அரசின் பாராமுகத்தால் பழைய அரசு மருத்துவமனை பாழகி வருகிறது. சிறிய காய்ச்சல், தலைவலிக் கூட 10 கி.மீ தொலைவில், க.விலக்கில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.திமுக ஆட்சியில் உருவான அரசு மருத்துவமனை தேனி நகரின் மையப்பகுதியில் என்ஆர்டி நினைவு அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இம்மருத்துவமனை கடந்த 1971ல் திமுக ஆட்சியில் திறக்கப்பட்டது. இதில், பொது மருத்துவப்பிரிவு, சித்தா, ஹோமியோ, மகப்பேறு, குழந்தைகள் நலம் என பல்வேறு பிரிவுகள், 200 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வந்தது. இம்மருத்துவமனையில் இசிஜி, எக்ஸ்ரே, ஸ்கேன் ஆகிய வசதிகளும் இருந்தன. தேனி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் தினசரி சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், 2004ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ஆண்டிபட்டி அருகே க.விலக்கில் அரசினர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்டது.இதையடுத்து, என்.ஆர்.டி நினைவு அரசினர் மருத்துவமனையில் இருந்த படுக்கைகள், எக்ஸ்ரே, ஸ்கேன் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் இரவோடு, இரவாக க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. இதனால், சுமார் 3 ஏக்கரில் ரூ.பல கோடி மதிப்பில் உருவான என்.ஆர்.டி நினைவு அரசினர் மருத்துவமனை மூடப்பட்டது.பகுதி நேரமாக பணிபுரியும் மருத்துவர்இது குறித்து ஊடகங்கள் சுட்டிக்காட்டியதையடுத்து ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் பகுதி நேரமாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து தினசரி காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை வந்து காய்ச்சல், தலைவலி ஆகிய சிறிய நோய்களுக்கு மட்டும் சிகிச்கை அளித்து வருகின்றனர். ஆனால், நோயாளிகளுக்கு ஊசி, மருந்து, மாத்திரை வழங்குவதும் கிடையாது.

நோயாளிகள் வருகை குறைந்ததால், இம்மருத்துவமனையில் மனநல மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால், மனநல மருத்துவமனை திறக்கப்பட்டாலும், மனநல சிகிச்சைக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து 2 மனநல மருத்துவர்கள் வந்து, மனநல நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்குவதோடு மாத்திரை மட்டும் வழங்கி வந்தனர்.குடோனாக மாறிய மருத்துவமனைஇந்நிலையில், கடந்தாண்டு மார்ச்சில் கொரோனா தொற்று பரவிய நிலையில், இம்மருத்துவமனை கொரோனா தனிமை முகாமாக மாற்றப்பட்டது. கொரோனா தாக்கம் குறைந்ததால், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக மாவட்டத்தின் பிற பகுதிகளில் கொரோனா தனிமை முகாம்களில் இருந்த படுக்கைகளை இங்கு குவித்து வைத்து குடோனாக மாற்றியுள்ளனர்.

கண்டுகொள்ளாத ஓபிஎஸ்2011 முதல் 10 ஆண்டுகளாக அதிமுக அரசு நடந்து வந்தநிலையில், தேனி மாவட்டத்தை சேர்ந்த துணை முதல்வர் ஓபிஎஸ்சிடம் தேனி நகர சமூக ஆர்வலர்கள் பலமுறை தெரிவித்தும், ஓபிஎஸ் கண்டுகொள்ளவில்லை. அதிமுக அரசு அலட்சியப்படுத்திய காரணத்தால் திமுக ஆட்சியில் தேனி நகர மக்களின் வசதிக்காக உருவாக்கப்பட்ட தேனி என்.ஆர்.டி நினைவு அரசு மருத்துவமனையானது பாழடைந்து போயுள்ளது.தாலுகா மருத்துவமனையாக மாற்ற கோரிக்கைதேனி மாவட்டத்தில் அனைத்து தாலுகாக்களிலும் அரசு மருத்துவமனை உள்ள நிலையில் தேனியில் மட்டும் தாலுகா மருத்துவமனை இல்லை. 1996ல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு தேனிக்கு மாவட்ட தலைநகர் அந்தஸ்து, தாலுகா தலைநகர் அந்தஸ்து என கொடுத்து அழகு பார்த்தது. ஆனால், தேனி என்.ஆர்.டி மருத்துவமனையை தாலுகா மருத்துவமனை மாற்ற முயற்சி எடுக்காத துணை முதல்வர் ஓபிஎஸ் மீது தேனி நகர மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

பொதுமக்கள் அவதி

தேனியில் பழைய பஸ்நிலையம் மற்றும் அல்லிநகரத்தை சுற்றியும் பெரியகுளம் ரோட்டிலும் தான் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. இதனால், காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட சிறிய நோய்களால் பாதிக்கப்படும் ஏழை, எளிய பொதுமக்கள் பழைய பஸ்நிலையம் வந்து, அங்கிருந்து டவுன் பஸ், அல்லது ஆட்டோவில் தான் 10 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். இல்லாவிடில் பழைய பஸ்நிலையத்தில் இருந்து புதிய பஸ்நிலையம் சென்று, அங்கிருந்து மதுரைக்கு செல்லும் பஸ்களி ஏறி, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இறங்க வேண்டும். இதனால், ஏழை, எளிய மக்கள் அவதிப்படுகின்றனர்.

Related Stories: