சித்தூரில் தொற்று பீதி சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு-அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சித்தூர் : சித்தூரில் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்படுவதால் அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, குப்பைகளை அகற்றி குப்பை தொட்டிகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

சித்தூர் கட்ட மஞ்சு பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள ஒவ்வொரு சாலையில் 2 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டிருந்தது. இதில், அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை சேகரித்து கொண்டு வந்து கொட்டி விட்டு சென்று வந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் மாநகராட்சி ஊழியர்கள் இங்குள்ள குப்பை தொட்டிகளை அகற்றிவிட்டனர்.

இதனால், இங்குள்ள சிலர் தங்கள் வீட்டில் சேகரிக்கப்படும் குப்பைகளை சாலையோரத்தில் கொட்டி விட்டு செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் குப்பை கழிவுகள் நிரம்பியுள்ளது. மேலும், அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும், ெகாசு உற்பத்தி அதிகரித்து அப்பகுதி மக்களுக்கு பல்வேறு காய்ச்சல் ஏற்படும் நிலை உள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் ெதரிவித்ததாவது: எங்கள் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 2 குப்பை தொட்டிகள் அமைத்திருந்தனர். ஆனால், தற்போது அந்த குப்பைத் தொட்டிகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி விட்டனர். இதனால் எங்கள் பகுதியில் உள்ள சிலர் தங்கள் வீட்டில் சேகரிக்கும் குப்பை கழிவுகளை சாலையோரத்தில் வீசி செல்கின்றனர்.

இதனால், எங்கள் பகுதியில் சுகாதார சீர்கேடு எற்பட்டுள்ளது. மேலும், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும், அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எங்கள் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து குப்பைத் தொட்டிகளை அமைத்து, சாலையோரம் உள்ள குப்பைக்கழிவுகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: