அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழந்து இங்கிலாந்து வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தத்தளித்தது. அப்போது 4வது ஓவரில் ஆர்ச்சர் வீசிய பந்தை ரிஷப் பன்ட் மட்டையை மாற்றி ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே வந்த பந்தை விக்கெட் கீப்பர் தலைக்கு மேல் ரிவர்ஸ் ஷாட் சிக்ஸ் விளாசினார். இதைக்கண்டு அனைவரும் மூக்கின் மேல் விரலை வைத்தனர். பலர் அதிர்ச்சியில் உறைந்தனர், சிலர் ரசித்துச் சிரித்தனர்.
இதுதொடர்பாக கெவின் பீட்டர்சன் தனது ட்விட்டர் பதிவில், ``ஹோலி ஸ்மோக்ஸ்! பன்ட் ஆடிய அந்த ஷாட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் பார்த்திராதது.