கோவா: 11 அணிகள் பங்கேற்ற 7வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் கோவாவில் கடந்த நவம்பர் மாதம் தொடங்கி நடந்து வந்தது. லீக் சுற்று முடிவில் முதல் 4 இடம் பிடித்த மும்பை சிட்டி, கொல்கத்தா, கவுகாத்தி மற்றும் கோவா எப்சி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் மும்பை சிட்டி- கோவா எப்சியும், கொல்கத்தா-கவுகாத்தி அணிகளும் மோதின. மும்பை அரை இறுதியில் 2 சுற்று முடிவில் சமநிலை வகித்ததால் (2-2) பெனால்டி ஷூட் அவுட் டில் 6-5 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.