மகா சிவராத்திரி விழாவையொட்டி பெரியகண்மாயில் மஞ்சு விரட்டு-காளைகள் முட்டி 4 பேர் காயம்

பொன்னமராவதி : வார்ப்பட்டு சூலப்பிடாரி அம்மன் கோயில் மகா சிவராத்திரி விழாவையொட்டி பெரியகண்மாயில் மஞ்சு விரட்டு நடந்தது. இதில் காளைகள் முட்டி 4 பேர் காயமடைந்தனர்.

பொன்னமராவதி அருகே உள்ள வார்ப்பட்டு சூலப்பிடாரி அம்மன் கோயில் மகா சிவராத்திரி விழாவையொட்டி பெரியகண்மாயில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் மஞ்சு விரட்டு நடந்தது.

இதில் மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட காளைகள் பங்கேற்றது. வார்ப்பட்டு பெரிய கண்மாயை சுற்றிலும் ஆங்காங்கே காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

இந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் விரட்டி பிடித்து அடக்க முயன்றனர். இதில் காளைகள் முட்டி 4 பேருக்கு காயம் ஏற்பட்டது.

பொன்னமராவதி சுற்றுவட்டார பகுதியில் இருந்து திரளானோர் வந்து மஞ்சு விரட்டை பார்வையிட்டனர். பாதுகாப்பு பணியில் பொன்னமராவதி போலீசார் ஈடுபட்டிருந்தனர். அவசர உதவிக்காக மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் இருந்தனர்.

Related Stories: