அந்தியூரில் கொம்பு தூக்கி அம்மன் கோயிலில் குண்டம் விழா

அந்தியூர் : அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனச்சரகத்திற்குட்பட்ட கரும்பாறை பகுதியில் கொம்பு தூக்கி அம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோயில் பூச்சாட்டுதலுடன் தொடங்கி, பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனையடுத்து நேற்று மாலை குண்டம் திருவிழாவிற்கு 60 அடி நீளமுள்ள குண்டம் தயார் செய்யப்பட்டது.

பொங்கல் வைத்தல், அம்மை அழைத்தல் நிகழ்ச்சி முடிந்தவுடன், கோயில் பூசாரிகள் முதலில் அக்னி குண்டத்தில் இறங்கி வர அதன்பின் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கையில் பூக்குச்சி ஏந்தி குண்டம் இறங்கினர். இதில் அந்தியூர், நகலூர், முனியப்பம் பாளையம், கொண்டயம்பாளையம், கீழ்வானி மூங்கில்பட்டி, அத்தாணி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். அந்தியூர் போலீசார் மற்றும் பர்கூர் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இக்கோயிலின் மறுபூஜை வருகிற 17ம் தேதி நடக்கிறது.

Related Stories: