ஓராண்டுக்குப் பிறகு கேரளாவில் 15 முதல் மெமு ரயில் சேவை: எக்ஸ்பிரஸ் கட்டணம் வசூல்

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரு வருடத்திற்குப் பின்  வரும் 15ம் தேதி முதல் மெமு ரயில் சேவை தொடங்குகிறது. கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த மார்ச்சில் நாடு முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் போக்குவரத்து படிப்படியாக தொடங்கப்பட்டு வருகிறது. ஆனாலும், தற்போது அனைத்தும் சிறப்பு ரயில்களாக மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. சாதாரண ரயில் போக்குவரத்து இதுவரை தொடங்கவில்லை. இந்நிலையில், கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் மெமு ரயில் போக்குவரத்து தொடங்கப்படுகிறது. முதல் கட்டமாக வரும் 15ம் தேதி முதல் கேரளாவில் 8 மெமு ரயில் சேவைகள் தொடங்கப்படுகின்றன. கொல்லம்-ஆலப்புழா, ஆலப்புழா-எர்ணாகுளம், எர்ணாகுளம்-சொரணூர், சொரணூர்-கண்ணூர் இடையே இந்த மெமு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் முன்பதிவு இல்லாவிட்டாலும், எக்ஸ்பிரஸ் கட்டணம் தான் வசூலிக்கப்படும்.

Related Stories: