மெகபூபா நேரில் ஆஜராக உத்தரவு அமலாக்கத்துறை சம்மனுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை

புதுடெல்லி: காஷ்மீர் முன்னாள் முதல்வரான மெகபூபா முப்தி, ஜம்மு காஷ்மீர் வங்கியில் முறைகேடாக கடன் பெற்றதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, அவர் மீது பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில், மெகபூபா வழக்கு விசாரணைக்காக வரும் 15ம் தேதி அலுவலகத்துக்கு நேரில் ஆஜராக கோரி அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதில், எந்த வழக்கு விசாரணைக்காக என குறிப்பிடாததால், அந்த மனுவை ரத்து செய்யும்படி, மெகபூபா தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், சம்மனில் எந்த வழக்கு தொடர்பாக ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடாததால், அதற்கு இடைக்கால தடை விதித்தனர். மெகபூபாவை 15ம் தேதி ஆஜராக வலியுறுத்த கூடாது என்றும் அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டனர்.

Related Stories: