மாவட்ட கூட்டுறவு வங்கி வளர்ச்சிக்கு பெண்களே காரணம்: கூட்டுறவு வங்கி தலைவர் தகவல்

கோலார்: மாவட்ட கூட்டுறவு வங்கி வளர்ச்சிக்கு பெண்களே காரணம் என்று மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் தெரிவித்தார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட கூட்டுறவு வங்கி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: ``கிராம, தாலுகா, மாவட்ட பஞ்சாயத்துக்களில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இடஒதுக்கீடு உள்ளது. அதே போல் சட்டப்பேரவை, மக்களவையில் 33 சதவிகிதம் வழங்க வலியுறுத்தப்பட்டு வருகிறது.

சில பெண்கள் இடஒதுக்கீட்டு அவசியத்தை சரியாக பயன்படுத்தி சமுதாயம் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு சிறந்த நிர்வாகம் நடத்திய உதாரணங்கள் உள்ளனர். அரசியல் அமைப்பின் படி பெண்களுக்கு அனைத்து துறையிலும் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சிகளில் ஆண்களுக்கு ஈடாக பெண்கள் உள்ளனர்.

அரசியலில் பெண்களுக்கு கிடைத்துள்ள அதிகாரத்தை ஆண்களுக்கு வழங்கி அரசியல் அமைப்புக்கு துரோகம் செய்யக்கூடாது. பெண்கள் தங்களின் அதிகாரத்தை சரியாக பயன்படுத்தினால் மட்டுமே முக்கிய பதவிகளுக்கு வர முடியும். வங்கி துறையில் பெண்கள் என்றால் நம்பிக்கை என்று அர்த்தமாகியுள்ளது. மாவட்ட கூட்டுறவு வங்கி வளர்ச்சிக்கு பெண்களே காரணம். நாட்டில் பெண்களை ஆதிபராசக்தி என்று தெரிவிக்கின்றனர். அக்கா, தங்கை, தாயியாக குடும்பத்தை காப்பாற்றும் பெண்களுக்கு வாழ்க்கையை கட்டிக்கொள்ளும் சக்தி உள்ளது. பெண்களுக்கு பொறுப்பு கொடுத்தால் திறமையாக செயல்படுகின்றனர். அதே போல் பெண்கள் வங்கியில் வாங்கிய கடன்களை சரியாக திருப்பி செலுத்தி வருவதால் முன்மாதிரியாகவுள்ளனர்’’ என்றார்.

Related Stories: