பாலக்காடு அருகே தண்ணீரில் ரேக்ளா போட்டி

பாலக்காடு : பாலக்காடு மாவட்டம் திருத்தாலா அருகே கப்பூரில் விவசாயினர் அமைப்பு சார்பில் தண்ணீரில் ரேக்ளா போட்டி நேற்று நடைபெற்றது. இதை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்து ரசித்தனர். பாலக்காடு மாவட்டத்தில் விவசாயிகளின் பாரம்பரிய போட்டிகளில் ஒன்றான தண்ணீரில் காளை மாடுகளின் ரேக்ளா போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த போட்டியில் பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து 96 காளைகள் பங்கேற்றன.

மேலும், ஆல் கேரளா ரேக்ளா அமைப்பினர் சார்பில் கவளப்பாறையில் கடந்த 2018ம் ஆண்டு வெள்ள சேதத்தில் வீடு இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வீடுகள் வழங்கப்பட்டன. கல்வி அமைச்சர் கே.டி.ஜலீல்  வழங்கினார். திருத்தாலா எம்.எல்.ஏ. பலராம் தலைமை தாங்கினார்.

ஆல் கேரளா ரேக்ளா அமைப்பு செயலாளர் நாசர், குருணியன்மோன், நிஷார் உட்பட ஏராளமானோர் விழாவில் பங்கேற்றனர்.

Related Stories: