திருப்போரூர் தொகுதியில் வாகன தணிகைக்கு 3 பறக்கும் படைகள்

திருப்போரூர்: திருப்போரூர் தொகுதியில் வாகனங்களில் பணம் மற்றும் இலவச பரிசு பொருட்கள் எடுத்து செல்வதை கண்காணிக்க 3 பறக்கும் படைகள், சோதனைச்சாவடிகளில் 3 சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், புகார் அளிக்க அவர்களின் செல்போன் எண்கள்  அறிவித்துள்ளனர். திருப்போரூர் தொகுதி தேர்தல் அலுவலர் சுப்பிரமணியன் - 89035 08515 பறக்கும் படைகள் புஷ்பலதா - வட்டாட்சியர் - 97906 46808 வெங்கட்ராமன் - வட்டாட்சியர் - 94442 91561 மணிவண்ணன் - மண்டல துணை வட்டாட்சியர் - 77087 49234 உதவி தேர்தல் அலுவலர்கள் ரஞ்சனி, வட்டாட்சியர், திருப்போரூர் - 96263 65761, துரைராஜ், வட்டாட்சியர், திருக்கழுக்குன்றம் - 94450 00501, கார்த்திகேயன், திருப்போரூர் ஒன்றிய ஆணையாளர் - 74026 06071. இந்த குழுக்கள் மட்டுமின்றி 3 சோதனைச்சாவடி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், வேட்பாளர்கள் செலவு, பிரசார பொது கூட்டங்களில் போடப்படும் நாற்காலிகள், மின்விளக்குகள், வாகனங்கள் ஆகியவற்றை வீடியோ பதிவு செய்ய தனிக்குழு அமைத்து, அக் குழு சேகரிக்கும் வீடியோ பதிவுகள் தேர்தல் முடிந்த பின், வேட்பாளர் கொடுக்கும் செலவு கணக்குடன் ஓப்பீடு செய்யப்படும். இதற்காக திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3 கணினி வசதியுடன் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுக் கூட்ட அனுமதி, வாகன அனுமதி அனைத்தும் ஆன்லைன் மூலமே மேற்கொள்ள வசதி செய்துள்ளனர்.

வேட்பாளர்கள், அரசியல் கட்சியினர் குறித்து பறக்கும்படைக்கு புகார்கள் அளித்தால், 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இல்லாவிட்டால், புகார் தானாக தொகுதி தலைமை தேர்தல் அலுவலருக்கு செல்லும். அங்கும் நடவடிக்கை இல்லையெனில், கலெக்டரின் நேரடி கவனத்துக்கு செல்லும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்போரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் சேவை மையம் தொடங்கப்பட்டு, அங்கு விரைவில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>