ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் விலை: மத்திய அமைச்சர் தகவல்

மதுரை: மதுரையில் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை சார்பில் ராம ரத யாத்திரை நிகழ்ச்சி நேற்று நடந்தது. மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் யாத்திரையை துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதும், ராம ராஜ்ஜியம் உருவாக்கப்படும். பெட்ரோல், டீசல் விலை என்பது சர்வதேச நிலவரத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டே இருக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையை  ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மாநில அரசுகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறினார்.

Related Stories:

>