ஐஎஸ்எல் கால்பந்து தொடர் அரையிறுதி முதல் சுற்றில் இன்று மும்பை-கோவா பலப்பரீட்சை

கோவா: 11  அணிகள் பங்கேற்ற 7வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை சிட்டி, கொல்கத்தா, கவுகாத்தி, எப்சி கோவா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அரையிறுதியில், லீக் சுற்றில் முதல்இடம் பிடித்த மும்பையும், 4வது இடத்தை பிடித்த கோவாவும், மற்றொரு அரையிறுதியில் 2வது இடத்தை பிடித்த  கொல்கத்தாவும், கவுகாத்தியும் மோதுகின்றன. தலா 2 என 4 அரையிறுதி ஆட்டங்கள் நடக்கிறது.  அரையிறுதி முதல் சுற்றில், மும்பை சிட்டி எப்சி- எப்சி கோவா அணிகள் இன்று மோதுகின்றன. இன்று இரவு 7.30 மணிக்கு, மோதுகின்றன.

இரு அணிகளும் இதுவரை 16 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில், 7ல் கோவா, 5ல் மும்பை வெற்றி பெற்றுள்ளன. 4 போட்டி டிராவில் முடிந்தன. நடப்பு சீசனில் லீக் சுற்றில் மோதிய 2 போட்டிகளில் ஒன்றில் மும்பை வென்ற நிலையில், மற்றொரு போட்டி டிராவில் முடிந்தது.  இந்த இரு அணிகளும் வரும் 8ம் தேதி மீண்டும் அரையிறுதி 2வது சுற்றில் மோதும். 2 போட்டியின் முடிவில் அதிக வெற்றி பெற்றஅணி பைனலுக்கு தகுதிபெறும்.

Related Stories:

>