ஆட்டோ டிரைவரிடம் வழிப்பறி செய்த சிறுவன் உள்பட 3 பேர் கைது

புதுடெல்லி: தெற்கு டெல்லி மாளவியா நகர் பகுதியை சேர்ந்தவர் கிஷன் முராரி. ஆட்டோ டிரைவர். ராணுவ காலனி பகுதியில் பயணியை  இறக்கிவிட்டுவிட்டு புதன்கிழமை அதிகாலை திரும்பி வந்த போது 3 பேர் ஆட்டோவில் ஏறி ஏபிஜே பள்ளிக்கு பயணம் செய்தனர். அங்கு சென்றதும்  மூன்று பேரும் கத்தியை காட்டி மிரட்டி முராரியிடம் இருந்த ரூ.3500 ரொக்கப்பணம், ஒரு செல்போனை பறித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும்  போலீசார் ஜெகதாம்பா ஜூகி கேம்ப் பகுதியை சுற்றி வளைத்தனர். அங்கு பங்கஜ், விவேக்‌ஷா மற்றும் ஒரு சிறுவனை கைது செய்தனர்.

Related Stories:

>