மதுரையில் அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்பான 18 இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் ரூ.175 கோடி வரிஏய்ப்பு கண்டுபிடிப்பு

மதுரை: மதுரையில் மதுரையில் அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்பான 18 இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் மறைக்கப்பட்ட ரூ.175 கோடி வருவாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் ரூ.3 கோடி அளவிற்கு ரொக்கப்பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. மதுரையில் நேற்று 2 அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் தான் இந்த சோதனையானது நடைபெற்றது.

இந்த சோதனைக்கு முக்கிய காரணம் தேர்தலின் போது பணப்பட்டுவாடா நடக்க இருப்பதாகவும், இந்த அரசு ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பணமானது கைமாற இருப்பதாகவும் வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் ராமநாதபுரத்தை அடிப்படையாக கொண்ட ஒப்பந்ததாரர் மற்றும் மதுரையை சேர்ந்த ஒரு ஒப்பந்ததாரர் ஆகியோருக்கு சொந்தமான 18 இடங்களில் இந்த சோதனையானது நடத்தப்பட்டது.

முதற்கட்டமாக 3 கோடி ரூபாய் ரொக்கப் பணமானது நேற்று இரவு பறிமுதல் செய்யப்பட்டிருந்ததாக வருமானவரித்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் வரிஏய்ப்பு தொடர்பாக தொடர்ந்து சோதனையானது நடத்தப்பட்டது. இந்த சோதனையில் தான் இவர்கள் வருமானத்தை குறைத்து காட்டிருப்பது தெரியவந்துள்ளது.

Related Stories: