சீட்டை உடைத்த மேக்ஸி!

நியூசிலாந்துக்கு எதிராக நேற்று நடந்த 3வது டி20ல் ஆஸி. ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்டு மிரட்டினார். அவர் அடித்த இமாலய சிக்சர் ஒன்றில் கேலரியில் இருந்த இருக்கை ஒன்று உடைந்து நொறுங்கியது. போட்டி முடிந்ததும் அந்த உடைந்த சீட்டில் மேக்ஸ்வெல் ஆட்டோகிராப் போட்டார். அறக்கட்டளைக்கு நிதி திரட்டுவதற்காக அதை ஏலம் விட திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: