பிஜேபியின் பி-டீம், சி-டீம்: கொமதேக தடாலடி

‘எப்படியாவது ஜெயிக்கணும் என்பதை விட, எப்படியாவது ஓட்டுகளை பிரிக்கணும் என்பதில் குறியாக இருக்குதுங்க பாரதிய ஜனதா. ஏற்கனவே அதிமுக, அவங்களோட அடிமை கட்சியாக கூட்டணியில் இருக்கு. அதே நேரத்தில் பாஜ பி-டீம், சி-டீம் என்று இரண்டு டீம்களையும் களத்தில் இறக்கி இருக்கு’. இப்படி அதிரடியாக போட்டு உடைத்துள்ளார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன். சேலம் அருகே நடந்த கூட்டத்தில் இது தொடர்பா அவர் பேசும்போது, அந்த டீம் எது என்பதற்கும் விளக்கம் அளித்துள்ளார். ‘திமுக ஆட்சிக்கு வந்துறக்கூடாதுன்னு இரவு பகலாக பாஜவினர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் வேல் யாத்திரை நடத்தினார்கள்.

திமுக தலைவர் கையில் தொண்டர்கள் வேல் கொடுத்தவுடன் அது எடுபடாமல் போனது. இதனால் நடிகர் கமல்ஹாசன் தலைமையில் ஒரு பி- டீமை உருவாக்கி, அதிமுக எதிர்ப்பு ஓட்டுகள் திமுக கூட்டணிக்கு விழுவதை குறைத்து விடலாம் என்று பாஜ கனவு காண்கிறது. அதே போல் சசிகலா தலைமையில் இன்னொரு சி-டீமையும் உருவாக்க கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்’ என்றார்.

Related Stories: