கீழடி 7ம் கட்ட அகழாய்வில் சுடுமண் மூடி குமிழ் கண்டுபிடிப்பு: 2,600 ஆண்டுக்கு முன் பயன்படுத்தப்பட்டதா?

திருப்புவனம்:  கீழடி 7ம் கட்ட அகழாய்வில் சேதமடைந்த நிலையில், சுடுமண் மூடி குமிழ் கண்டறியப்பட்டது. இது 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் கணேசன் என்பவரது நிலத்தில் கடந்த பிப்.13ம் தேதி துவங்கியது. கீழடி அகழாய்வில் ஆறு குழிகள் தோண்ட திட்டமிடப்பட்டு முதலில் ஒரு குழி மட்டும் தோண்டப்பட்டது. இதுவரை இரண்டு மீட்டர் ஆழம் தோண்டப்பட்ட நிலையில் மணிகள், பாசிகள், பானை ஒடுகள் உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டன.

நேற்றைய அகழாய்வின்போது இரண்டு செ.மீ விட்டமுள்ள சுடுமண் மூடி குமிழ் சேதமடைந்த நிலையில் கண்டறியப்பட்டது. தண்ணீர் வைக்க பயன்படுத்தப்படும் மண் பானை மூடி போன்ற அமைப்பை உடையதாக உள்ளது. மிகவும் சிறியதாக இருப்பதால் 2,600 ஆண்டுகளுக்கு முன் சிறுமியரின் விளையாட்டு பொருளாக இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

Related Stories: