பெண்களுக்கு எதிரான வன்கொடுமை: போராட்டம் நடத்த தேவகவுடா அழைப்பு

பெங்களூரு: பெங்களூருவில் இயங்கிவரும் உமன்ஸ் வாய்ஸ் (பெண்களின் குரல்) அமைப்பு சார்பில் நந்திதுர்கம் சாலையில் உள்ள அரங்கில் ‘‘பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்கொடுமைக்கு முடிவு’’ என்ற அமைப்பின் துவக்க விழா டாக்டர் ரூத்மனோராமா தலைமையில் நடந்தது. விழாவில் பெங்களூரு கத்தோலிக்க தலைமை பேராயர் பீட்டர் மசோடா, டி.எச்.அஞ்சனப்பா, பொம்மையா உள்பட பலர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். புதிய அமைப்பை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து எச்.டி.தேவகவுடா பேசும்போது, நமது இந்திய பண்பாடு, கலாச்சாரத்தில் பெ

ண்களுக்கு சிறப்பிடம் உள்ளது. பெண்களின் சிறப்பு வீட்டிற்கும், சமூகத்திற்கும், நாட்டிற்கும் மிக அவசியமாகும். ஒரு காலத்தில் பெண்களை அடுப்பறை பிறவிகளாக மட்டுமே பார்க்கபட்டனர். ஆனால் தற்போது ஆண்களுக்கு இணையாக பெண்களின் வளர்ச்சி அனைத்து துறைகளிலும் உள்ளது. இருப்பினும் ஏழை, நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெண்கள் மீதான வன் கொடுமைகள் சத்தமில்லாமல் நடந்து வருகிறது. இதை தடுக்க வேண்டும். பெண்கள், சிறுமிகள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பெண்களுக்கு எதிராக வன்கொடுமைகளை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டும்’’ என்றார்.

Related Stories: