கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ்: பிரதமர் மோடியை தொடர்ந்து துணை ஜனாதிபதி, தமிழக ஆளுநர், 2 மாநில முதல்வர்கள் போட்டுக்கொண்டனர்.!!!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து துணை ஜனாதிபதி, ஆளுநர், மாநில முதல்வர்கள் என பலர் இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் நடந்து வருகிறது.

இதில், முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட 3  கோடி முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஆக்ஸ்போர்டு பல்கலை.யின் கோவிஷீல்டு தடுப்பூசியும், இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவோக்சின் தடுப்பூசியும் பயன்படுத்தப்படுகிறது.

இதையடுத்து நாடு முழுவதும் முதியவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்களுக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இதன்படி, இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக்கொண்டார். பிரதமர் மோடியை தொடர்ந்து, துணை ஜனாதிபதி, தமிழக ஆளுநர், மாநில முதல்வர்கள் என பலர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

* சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக் கொண்டார்.  

* சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக் கொண்டார்.

* ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக் கொண்டார்.

* பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இன்று பாட்னாவில் உள்ளமருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் எடுத்துக் கொண்டார்.

* மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், கொரோனா தடுப்பூசியை இன்று முன்பதிவு செய்வேன், நாளை தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளேன் என்றார்.

Related Stories: