ரயில் மோதி வெல்டர் பலி

ஆவடி: ஆவடி பெரியார் நகர் ஸ்டாலின் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(37). வெல்டர். நேற்று காலை சென்னை செல்ல ஆவடி ரயில் நிலையம் வந்தார். பின்னர் அவர் கவுன்டரில் டிக்கெட் எடுத்துவிட்டு தண்டவாளத்தை கடந்து ரயிலில் ஏறச்சென்றார். அப்போது அந்த வழியாக வந்த மின்சார ரயில் அவர் மீது மோதியது. இதில் உடல் நசுங்கி உயிருக்கு போராடினார். அக்கம் பக்கத்தினர் அவரை  மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். புகாரின்ேபரில் ஆவடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Stories:

>