பத்திரப் பதிவுத்துறையில் 3 டிஐஜி, 8 டிஆர் பணியிட மாற்றம்: தமிழக அரசு தகவல்

சென்னை: பத்திரப்பதிவுத்துறையில் பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்த 3 டிஐஜிக்களை பணியிட மாற்றம் செய்து செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கோவை மண்டல டிஐஜி ஜெகதீசன் சென்னை பதிவுத்துறை பயிற்சி நிறுவன இயக்குனராகவும், சென்னை பதிவுத்துறை பயிற்சி நிறுவன இயக்குனர் சுவாமிநாதன் மதுரை மண்டல டிஐஜியாகவும், மதுரை மண்டல டிஐஜி வாசுகி, கோவை மண்டல டிஐஜியாக பணியிட மாற்றப்பட்டுள்ளனர். அதேபோன்று, சார்பதிவாளர்கள் 8 பேருக்கு மாவட்ட பதிவாளராக பதவி உயர்வு வழங்கி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி மரக்காணம் சார்பதிவாளர் சிவக்குமார், அம்பத்தூர் சார்பதிவாளராகவும் (மாவட்ட பதிவாளர் அந்தஸ்து), கன்னியாகுமரி சார்பதிவாளர் நூர்ஜஹான், தூத்துக்குடி மாவட்ட பதிவாளராகவும் (தணிக்கை), கன்னியாகுமரி சார்பதிவாளர் (வழிகாட்டி) கனகராஜன், திருப்பூர் இணை 1ம் எண் சார்பதிவாளராகவும், ஏற்காடு சார்பதிவாளர் சுரேஷ்பாபு தென்காசி மாவட்ட பதிவாளராகவும் (தணிக்கை), நெல்லை, மாவட்ட பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி  சிவகங்கை மாவட்ட பதிவாளராகவும் (தணிக்கை) தஞ்சாவூர் சார்பதிவாளர் (வழிகாட்டி) முத்துக்குமார் அண்ணாநகர் சார்பதிவாளராகவும், திருவண்ணாமலை சார்பதிவாளர் (நிர்வாகம்) தென்மலர் அரியலூர் மாவட்ட பதிவாளராகவும் (தணிக்கை), கிருஷ்ணகிரி சார்பதிவாளர் (நிர்வாகம்) ராஜீக்கண்ணு திண்டிவனம் மாவட்ட பதிவாளராகவும் (தணிக்கை) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குற்றச்சாட்டால் 14 பேருக்கு பதவி உயர்வு இல்லை

பத்திரப்பதிவுத்துறையில் பணியாற்றி வரும் சார்பதிவாளர்கள் அன்பழகன், ரவிச்சந்திரன், லலிதா பவானி, பழனி, வீரக்குமார், வனிதா, ரவிசங்கர், மகாலட்சுமி, சரஸ்வதி, முரளி கிருஷ்ணா, ராதாகிருஷ்ணன், விமலா, சங்கரன் ஆகிய 13 பேர் மீது 17வது பிரிவின் கீழ் நடவடிக்கை நிலுவையில் உள்ளது. அதனால், அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. அதேபோன்று சார்பதிவாளர் ராஜீ தண்டனையில் இருப்பதால் அவருக்கும் பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: