கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் போலீசார் தாக்கல் செய்துள்ள தகவலில் முரண்பாடு

உதகை: கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை வழக்கில் போலீசார் தாக்கல் செய்துள்ள தகவல்களுக்கும், சாட்சிகள் விசாரணைக்கும் முரண்பாடு இருப்பதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. சம்பவம் நடந்த இடத்திற்கு அப்போதைய நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் சங்கர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா ஆகியோர் சென்ற நேரம் குறித்து போலீசார் தெரிவித்திருக்கும் தகவல்கள் முரண்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஜெயலலிதாவின் பணிப்பெண் ஆகியோர் அளித்துள்ள வாக்குமூலத்தில் மாறுபாடு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட சயான் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களை மீண்டும் விசாரணைக்கு அழைக்க வேண்டி இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கோத்தகிரி அருகே ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாடு பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு கொலை மற்றும் கொள்ளை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. உதகையில் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் அரசு தரப்பு விசாரணை முடிந்து எதிர்தரப்பு சாட்சி விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: