கிரீன் கார்டு தடை நீக்கம்

வாஷிங்டன்: கிரீன் கார்டுக்கு டிரம்ப் நிர்வாகம் விதித்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். எச்1பி விசாவின் மூலம் அமெரிக்காவில் பணியாற்றுகிறவர்கள், அங்கு நிரந்தரமாக வசிப்பதற்கான சட்ட அங்கீகாரமாக க்ரீன் கார்டு வழங்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கின்போது பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்த முன்னாள் அதிபர் டிரம்ப், அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளை பிற நாட்டவர்கள் அபகரிப்பதாகக் கருதினார்.

இதனால், கிரீன் கார்டு வழங்குவதற்கு கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் தடை விதித்தார். டிரம்பின் பல சட்டங்களை ரத்து செய்து கொண்டுள்ள பைடன், சமீபத்தில் எச்1பி விசா நடைமுறையில் பழைய லாட்டரி முறையே தொடரும் என்று அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது கிரீன் கார்டு தடையை நீக்கியுள்ளார். இதன்மூலம் எச்1பி விசாவை அதிகம் பயன்படுத்துகிற இந்தியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories:

>