மத்திய அரசு திட்டவட்டம் ஒரே பாலின திருமணத்துக்கு அனுமதி அளிக்க முடியாது

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஓரே பாலின திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கவிதா அரோரா என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம்,  மத்திய அரசும், டெல்லி அரசும் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், அதன்படி மத்திய அரசு சார்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘ஒரே பாலின திருமணத்தை கண்டிப்பாக அங்கீகரிக்கக் கூடாது. ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக வாழ்வதும், அவர்கள் திருமண வாழ்க்கையை மேற்கொள்வதும் இந்திய திருமண கலாச்சாரத்தின்படி ஏற்றுக் கொள்ளத்தக்கது கிடையாது. குறிப்பாக, ஒரே பாலின சேர்க்கையை சட்ட விரோதம் என அறிவித்த சட்டப் பிரிவு 377 தற்போது நீக்கப்பட்டு இருப்பதையும் அடிப்படையாகக் கொண்டு இந்த வகையான திருமணத்தை தங்களின் அடிப்படை உரிமை என யாரும் கோரிக்கை வைக்க முடியாது,’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: