அகமதாபாத்தில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

அகமதாபாத்: அகமதாபாத்தில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 145 ரன்கள் எடுத்தது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அனைத்து விக்கெட்களையும் இழந்து 112 ரன்கள் எடுத்தது. பின்னர் 2வது இன்னிங்ஸ் ஆடிய இங்கிலாந்து அணி 81 ரங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 49 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 49 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக இரண்டு அணிகளும் தலா 1 போட்டிகளில் வென்றுள்ளது. இன்றைய வெற்றியை தொடர்ந்து இந்திய அணி 2:1 என்ற விகிதத்தில் முன்னிலை பெற்றுள்ளது.

Related Stories:

>