அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்பமனு தொடக்கம்: எடப்பாடியில் இபிஎஸ், போடியில் ஓபிஎஸ் மீண்டும் போட்டி..!!

சென்னை: சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களுக்கு விருப்பமனு விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை மார்ச் 5-ம் தேதிக்குள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்ப மனு விநியோகிக்கப்பட உள்ளது.

தமிழம், புதுச்சேரி, கேரளா சட்டப்பேரவைத் தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு, சென்னை - ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று முதல் விருப்ப மனு விநியோகிக்கப்படுகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர், விருப்ப மனு விநியோகத்தை தொடங்கி வைக்கின்றனர்.

தமிழகத்தில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கான விருப்ப மனுக்களை 5 ஆயிரம் ரூபாய்க்கும், கேரளாவுக்கான விருப்ப மனுக்களை 2 ஆயிரம் ரூபாய்க்கும் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சட்டமன்ற தேர்தலில் சேலம் எடப்பாடி தொகுதியில் மீண்டும் முதல்வர் பழனிசாமி போட்டியிடுகிறார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போடி நாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார். எடப்பாடியில் போட்டியிட முதல்வரும், போடியில் போட்டியிட துணை முதல்வரும் அதிமுகவில் விருப்பமனு அளித்துள்ளார்.

Related Stories: