புதுச்சேரியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த வெங்கடேசன் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்: துரைமுருகன் அறிவிப்பு !

புதுச்சேரி: புதுச்சேரியில் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த வெங்கடேசன் திமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் காங். எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணை தொடர்ந்து தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன் நேற்று  பதவி விலகியதால் பரபரப்பு அதிகரித்தது. இதனால் புதுவையில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு பலம் 12 ஆக குறைந்துள்ளது.

இதனையடுத்து, தற்போது திமுக தலைமை ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் புதுச்சேரி மாநிலம், தட்டாஞ்சாவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.வெங்கடேசன், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: