தமிழகத்தில் சீதாராம் யெச்சூரி பிரசார தேதி மாற்றம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை:  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் கரத் மற்றும் பிருந்தா கரத் ஆகியோரும் தமிழகத்தில் பிரசார கூட்டங்களில் பங்கேற்கின்றனர். ஏற்கனவே, சீதாராம் யெச்சூரிக்கு திட்டமிடப்பட்டிருந்த தேர்தல் பிரசார கூட்டங்களின் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 4ம் தேதி கோவை, திருப்பூர், மார்ச் 5ம் தேதி சேலம், தர்மபுரி, மார்ச் 6ம் தேதி சென்னை ஆகிய இடங்களில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்கிறார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: