அரூர் பகுதியில் மரவள்ளி நடவு பணி தீவிரம்

அரூர் : தர்மபுரி மாவட்டத்தில் போதுமான தண்ணீர் வசதி இல்லாததால், வறட்சியை தாங்கி வளரும் பயிரான மரவள்ளி கிழங்கு அதிக அளவில் பயிரிடப்படுகிறது. ஆண்டுதோறும் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை அறுவடை பணிகள் நடைபெறும். அத்துடன் கிழங்கு பிடுங்கி விட்டு, உடனேயே குச்சியை மீண்டும் நடுவதற்கு தொடங்கி விடுவார்கள். தற்போது அரூர், கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, புதுப்பட்டி, கோபிநாதம்பட்டி கூட்ரோடு, மொரப்பூர் உள்ளிட்ட பகுதியில் மரவள்ளி குச்சிகள் நடும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: