சென்னையில் கலப்பு ஹாக்கி: ஹரிதாஸ் அணி கோல் மழை

சென்னை: சென்னையில் நடைபெறும் ‘கலப்பு ஹாக்கி’ போட்டியில்  ஹரிதாஸ் அணி கோல் 7-0 என்ற கோல் கணக்கில் ரைசிங் ஸ்டார் அணியை வீழ்த்தியது. வீரர்கள், வீராங்கனைகள் இணைந்து அணிக்கு 7 பேர் விளையாடும் தென்னிந்திய அளவிலான ‘முதலாவது பழனிசாமி நினைவு கலப்பு ஹாக்கி போட்டி’  சென்னை, எழும்பூர் ஹாக்கி அரங்கில் நேற்று தொடங்கியது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த போட்டியில் ஹரிதாஸ் ஹாக்கி கிளப் 7-0 என்ற கோல் கணக்கில் ரைசிங் ஸ்டார் ஹாக்கி கிளப் அணியை அபாரமாக வென்றது. கோவையை சேர்ந்த  7’எஸ்,  சென்னையை சேர்ந்த மெட்ராஸ் நேஷனல் ஹாக்கி கிளப் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது. அதன்பிறகு பெனால்டி ஷூட் அவுட் முறையில்  மெட்ராஸ் அணி 3-2 என்ற கோல் கணக்கில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இந்த 2 அணிகளுடன் லீ புதுச்சேரி கிளப்,  பிளாக் டவுன் பாய்ஸ், ஜோ ஜோ ஹாக்கி கிளப், யுனைடட் ஹாக்கி கிளப், சென்னை சீட்டாஸ், வேலூர் விடிஎச்ஏ, சிடிஎஸ், கிரீன் ஐஸ் கிளப்,  ஹாக்கி குருவிநத்தம்,  வாடிபட்டி ராஜா ஹாக்கி கிளப் என 12 அணிகள் தகுதிபெற்றன.இந்த  12 அணிகளும், தலா 3 அணிகள் கொண்ட 4 பிரிவுகளாக மோதும் லீக் சுற்று இன்று நடைபெறும். நாளை அரை இறுதி மற்றும் இறுதிப்போட்டி நடக்க உள்ளது.

Related Stories: