ஐபிஎல் 2021: ஏலம் போகாத ஆஸ்திரேலிய கேப்டன்

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ஒன்டே மற்றும் டி.20 கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஏலம் போகவில்லை. அவர் ஐபிஎல்லில் டெல்லி, பஞ்சாப், குஜராத் லயன்ஸ், புனே, மும்பை, ராஜஸ்தான், ஐதராபாத், பெங்களூரு என சென்னை, கொல்கத்தாவை தவிர அனைத்து அணிகளுக்காகவும் ஆடி உள்ளார். இதுவரை 87 போட்டிகளில், 2005 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த முறை பெங்களூரு அணிக்காக 12 போட்டிகளில் ஆடி 268 ரன்கள் எடுத்தார். அடிப்படை விலையாக ரூ.2 கோடியாக இருந்த அவரை யாரும் ஏலம் எடுக்கவில்லை.

இதேபோல் ஆஸி.யைச் சேர்ந்த ,லபுஸ்சேன், மேத்யூ வேட், அலெக்ஸ் கேரி , இங்கிலாந்தின் ஜாசன் ராய், அலெக்ஸ் ஹாலஸ், அடில் ரஷித், வெஸ்ட் இண்டீசின் டேரன் பிராவோ, காட்ரெல், நியூசிலாந்தின் டிம் சவுதி, காலின் முன்ரோ, மார்ட்டின் கப்தில், தென்ஆப்ரிக்காவின் வான்டெர் துஸ்சென் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஏலம்போகவில்லை. இந்தியாவைச் சேர்ந்த ஹனுமன் விகாரி, வருண் ஆரோன், மோகித்சர்மா உள்ளிட்டவர்களையும் யாரும் ஏலம் எடுக்கவில்லை.

62 இறந்த உடல்களும் 28 உடல் பாகங்களும் மீட்கப்பட்டுள்ளன. ஐந்து இடங்களில் மீட்பு மற்றும் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன: உத்தரகண்ட் மாநிலம் சாமோலியில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை குறித்து டிஜிபி அசோக் குமார்

Related Stories: