வதோதரா:குஜராத்தில் இளைஞர்களின் வாக்குகளை கவர வதோதராவில் டேட்டிங் மையங்கள் உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குஜராத்தில் வதோதரா உள்ள 6 மாநகராட்சித் தேர்தல்களுக்கான பிரசாரம் தீவிரமடைந்து வருகிறது. ஆளும் பாஜகவும், காங்கிரசும் போட்டி போட்டு வாக்குறுதிகளை அளித்து வருகின்றன. இளம் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக காங்கிரஸ் கட்சி அதிர்ச்சியூட்டும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வதோதரா காங்கிரஸ் தலைவர் பிரசாந்த் படேல் கூறுகையில், ‘இளைஞர்களின் வாக்குகளை கவரும் வகையில் ‘டேட்டிங்’ (ஆண் - ெபண் ஒன்றாக தங்கள் விருப்பப்படி இருத்தல்) மையங்கள் வதோதராவை அடுத்த சன்ஸ்காரி நகரத்தில் அமைக்கப்படும். இங்கு பணக்கார இளைஞர்கள் மட்டுமே அனுமதிக்கபடுகின்றனர்.