உணவு பாதுகாப்பு துறையினர் ஓட்டல்களில் ஆய்வு

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், திருப்பூர் மாநகராட்சி வடக்கு பகுதி, வெள்ளக்கோவில், பல்லடம், அருள்புரம், மகாலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள ஓட்டல், தள்ளுவண்டி கடைகளில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கடைகளில் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த உடைந்த முட்டைகள் கண்டறியப்பட்டு சுமார் 1500 முட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. மேலும், அந்த கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆய்வின்போது பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் பயன்படுத்தப்பட்டதா? எனவும், பிளாஸ்டிக், செயற்கை நிறங்கள் மற்றும் அஜினமோட்டா பயன்படுத்தப்படுகிறதா? எனவும் 36 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் 2 கிலோ வீதம் 6 கடைகளில் பறிமுதல் செய்யப்பட்டு, ஒவ்வொரு கடைக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.12 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. இதேபோல் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 1 கிலோ வீதம், 2 கடைகளில் பறிமுதல் செய்யப்பட்டு, ஒவ்வொரு கடைக்கும் ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.

Related Stories: