மாலூர் சிவப்பு ரோஜாவுக்கு சர்வதேச அளவில் புகழ்

மாலூர்: கோலார் மாவட்டம் வறட்சி பாதித்த பகுதியாக உள்ளது. இருப்பினும் தோட்டக்கலை மற்றும் மலர் உற்பத்தி செய்வதில் விவசாயிகள் கடும் சவாலை சந்தித்து பயிர் செய்து வருகிறார்கள். அந்த வகையில் மாலூர் தாலுகா, லக்கூரு கிராமத்தில் விவசாயிகள் பயிர் செய்யும் சிவப்பு ரோஜாவுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஒரு ஏக்கர் நிலத்தில் ரோஜா பயிர் செய்து பராமரிக்க மாதம் ரூ.15 ஆயிரம் செலவு செய்யப்படுகிறது. சரியான மின்சாரம் கிடைத்தால் மலர் சாகுபடியில் சாதிக்க முடியும். இதில் ஏதாவது சறுக்கல் ஏற்பட்டால், மலர் உற்பத்தி பாதிப்பு ஏற்படும். இவ்வளவு நெருக்கடி மத்தியில் லக்கூரு விவசாயிகள் இவ்வாண்டு சிவப்பு ரோஜா மலர்கள் உற்பத்தி செய்துள்ளனர்.

பிப்ரவரி மாதம் சிவப்பு ரோஜாவுக்கு இந்தியா மட்டுமில்லாமல், சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 15 நாட்களில் 20 ஆயிரம் சிவப்பு ரோஜாக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளதின் மூலம் லாபம் ஈட்டியுள்ளனர். மாலூர் தாலுகாவில் வாசனை திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்கினால், விவசாயிகள் பயிர் செய்யும் ரோஜா உள்ளிட்ட மலர்கள் பயிர் செய்யும் விவசாயிகள் பயனடைவார்கள்.

Related Stories: